சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாதவர்களே பிரிவினை வாதத்தை தூண்டி வருகின்றனர். பிரிவினை வாத பிரசாரம் இல்லாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது. ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பகிர்வு இடம்பெறும் என சுகாதார மற்றும் போசணை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கம் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு செல்லவேண்டும் என தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவ்வாறில்லாமல் இவர்களுக்கு தேர்தல் தேவை என்பதற்காக தேர்தலை நடத்த முடியாது.
மேலும், நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக இடம்பெறும் சாத்தியம் இருக்கின்றது எனவும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.