web log free
May 23, 2026

'ஐ.தே.க வேட்பாளரே களமிறக்கப்படுவார்'

கட்சியின் ஆதரவாளர்களுக்கான வேட்பாளரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில காலங்களாக ஐக்கிய தேசிய கட்சி அல்லாதவர்களே, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டதாக தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரே போட்டியிடுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd