web log free
April 06, 2026

வைத்தியர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்

குருநாகல் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட சேகு சியாப்தீன் என்ற வைத்தியர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியருக்கு எதிராக, மேலும் 3 பெண்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக சபையிடம் நேற்று அவர்கள் குறித்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக, நேற்றைய தினமே, வாரியபொல மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் குறித்த மருத்துவருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற நிலையில், அந்த காலப்பகுதி முதல் தமக்கு குழந்தை பேறு இல்லாது போயுள்ளதாக குறித்த பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd