வெல்லம்பிட்டியவில் அமைந்துள்ள செப்புத் தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 8 பேரையும், பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த ஊழியர்கள் 8 பேரும் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்றைய தினம் மன்றில் முன்னிலையான போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை 28ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 1ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு குறித்த ஊழியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, குறித்த தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட 10ஆவது சந்தேக நபரை ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.