தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயனக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், அதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் முன்வைத்திருப்பது, நாடு மிகை பணவீக்கமாக மாறுவதைத் தடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
இந்த இலக்கை அடைய கடுமையான நிதி கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இந்த முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2023க்குள் பணவீக்கத்தை 0.80% ஆகக் குறைத்துள்ளோம்.