web log free
February 09, 2026

எந்த நேரத்திலும் தேர்தல்

எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தலுக்கு கட்சியை உடனடியாக தயார்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் காலங்களில் கட்சி உறுப்பினர் குழுக்களை அமைத்து தொகுதி நிர்வாக சபை கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் பொதுத் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd