தற்போதைய சூழ்நிலையில் தனது உயிரிழக்க நேர்ந்தால் அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், தனது வாழ்க்கை தொடர்பில் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“சபாநாயகர் அவர்களே, இது அரசியலில் புதிய யுகமாக இருக்க வேண்டும். அதில் என் உயிரை இழக்க நேரிடலாம். நான் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம். அது நாளையா, இன்றோ, மறுநாளோ என்று தெரியவில்லை. அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும். ஹன்சார்டில் இருந்து இவற்றை வெட்ட வேண்டாம். ஆனால் இந்த 134 பேரும் அவருக்கு ஜனாதிபதியாக வாக்களித்தார்கள். அவர் எங்களைப் பழிவாங்குவாரா என்ற கேள்வி உள்ளது" என ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.