எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தொப்புளைச் சுற்றி இருபத்தொரு விஷர் நாய் கடி ஊசி செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தினமும் நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதாகவும், இது விஷர் நாய் கடிபட்ட மனிதனைப் போன்றது என்றும் அவர் கூறினார்.
எனவே சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் விஷர் நாய் கடி பிரிவின் ஊடாக எதிர்கட்சி தலைவருக்கு இருபத்தி ஒரு தடுப்பூசி போடப்பட வேண்டும் என தெரிவித்த அவர், எதிர்கட்சி தலைவருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு, பதினான்கு விஷர் நாய் கட நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்.
இது போன்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்க்கட்சித் தலைவரை தனது முழு நாடாளுமன்ற வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.