முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவரை தவறான முறையில் கைது செய்து தடுத்து வைத்திருப்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் இணைந்து தம்மை ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்க திட்டமிட்டதாகவும், அரசியல் இலாபங்களுக்காக இது திட்டமிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்களைக் கூறுமாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் இதனால் தமக்கு எதிரான வழக்குகளில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.