மொட்டுவின் பிரபல்யம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் நாமல் ராஜபக்சவும் அவரைச் சுற்றியிருந்த பல எம்.பி.க்களும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது தெரிந்ததே.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால், நாமல் ராஜபக்ஷவை முன்னுக்கு கொண்டு வருவதற்கு அவர்கள் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் முற்றாக குளறுபடியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.