சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை பெற்றுக்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகை கிடைத்தால் இலங்கை திவால் நிலையில் இருந்து விடுபடும் என்று நம்பலாம் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளை கையாள்வதற்கு தாம் தயார் எனவும் மேலும் ஒரு தலைமுறையை பிரிவினைவாதத்திற்குள் தள்ளுவதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.