மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பன நீர் கட்டண அதிகரிப்புக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நீர் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் தொடர்பான இறுதி வரைவு இம்மாதத்தில் தயாரிக்கப்பட்டு முடிக்கப்படும் எனவும், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மானிய விலையில் நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகத்திற்காக பெருமளவிலான மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியிருப்பதால், தற்போதைக்கு நீர் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.