அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவை ஊடாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான குறைந்தபட்ச சம்பளம் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் குழுவும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் கூடி, சம்பந்தப்பட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உடன்பாடு செய்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.