இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குழந்தைகளின் தாய் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது ஒரு வாரமான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராகம மற்றும் களனியைச் சேர்ந்த மேலும் இரு பெண்கள் குழந்தைகளை 'கொள்முதல்' செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த அநாமதேய இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைக்குழந்தைகளின் தாய், ராகம மற்றும் களனியில் உள்ள இரண்டு பெண்களிடம் சிசுக்களை தலா 25000 ரூபாவிற்கு விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் நேற்று (டிசம்பர் 07) ஆஜர்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.