நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பத்தரமுல்ல நெலும் மாவத்தை பிரதேசத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், அவர் வேண்டுமென்றே அதனை தவறவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் ஜயந்த கடகொட எம்.பி மாத்திரமே வந்துள்ளமை விசேட அம்சமாகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அலுவலகம் பெறப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக சமூக ஊடக ஆர்வலர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதுடன் பத்தரமுல்லையில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான உணவகம் ஒன்றில் அந்த ஊடகவியலாளர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தும் இரகசிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.