web log free
April 06, 2026

வில்பத்து வழக்கினை மீண்டும் விசாரிக்க தீர்மானம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீள விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்து சுற்றாடல் பாதுகாப்பு கேந்திர நிலையத்தினால் 2015ஆம் ஆண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, இதன் தீர்ப்பு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எனினும், இந்த வழக்கினை மீள விசாரணை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான ஜகத் டி சில்வா மற்றும் நிஷ்சங்க பந்துல கருணாரத்ன ஆகியோரால் எதிர்வரும் ஜுலை மாதம் 31ஆம் திகதி முதல் இந்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Monday, 09 September 2019 02:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd