தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்வைப்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவசர தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளின் கூட்டிணைவாக இதைச் செய்து வருகிறார். பலர் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், இக்கட்டான காலங்களில் ஒரு நாட்டில் அராஜகத்தை நடத்துவதற்கு இத்தகைய குணங்கள் கொண்டவர்கள் மிகக் குறைவு என்றார்.