ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களாக நான்கு நபர்களை பரிசீலித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது பரிசீலிக்கப்படும் வேட்பாளர் பட்டியலில் இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மிகவும் பொருத்தமான வேட்பாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம், ஜனாதிபதி தேர்தலில் வலுவான போட்டியை காண்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.