தமிழ் அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் அழைப்பு விடுக்கப்பட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கட்சிகள் தனிப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களை முன்வைப்பதை விட பொது வேட்பாளரை முன்னிறுத்துவது காலத்துக்கு ஏற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது தமிழ் வேட்பாளராக முன்வைக்கப்பட்டால், அதற்கு தாம் மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தனக்கு அதிக விருப்பம் இல்லை என்றும், ஆனால் தெற்கில் ஐம்பது சதவீத வாக்குகளை எவராலும் பெற முடியாது என்பதால், வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.