web log free
April 01, 2026

ஜனவரி 16ம் திகதி ஏற்படவுள்ள பதவி மாற்றம்

தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளதாக யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பசில் ராஜபக்ஷ இணக்கப்படுத்தி உள்ளதாக அந்த நேர்காணலில் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd