web log free
September 20, 2024

பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் குறித்த அதிர்ச்சி தகவல்

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலில் 2,40,000 நானோபிளாஸ்டிக் புற்றுநோயை உண்டாக்கும் துகள்கள் இருப்பதாக, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலில் 110,000 முதல் 400,000 நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகவும், அதில் 240,000 நச்சுத் துகள்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பிளாஸ்டிக் போத்தலில் இருந்து குடிக்கும் தண்ணீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிறிய புற்றுநோய் துகள்கள் இருப்பதாகவும், தண்ணீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும் அந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நானோபிளாஸ்டிக் துகள்கள் மிகவும் கரையக்கூடிய இரசாயன வகை என்பதால், அவை மிக விரைவாக உடலுக்குள் நுழையும் திறன் கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.