web log free
September 20, 2024

இணையத்தில் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டாம்

வெளிநாட்டு கடன் சுறாக்கள் இலங்கைக்கு வந்து 300 வீத அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி இலங்கையர்களை கடன் வலையில் சிக்க வைக்கும் மோசடியை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடனை செலுத்துவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டால், கடனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு குடும்பங்களை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பதாக பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்து கடன் வலையில் சிக்கிய மக்களை அழைத்து வந்து கலந்துரையாடியதாகவும், ஆனால் சட்டத்தின் ஓட்டைகள் காரணமாக இதற்கான தீர்வுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

வங்குரோத்து நாட்டில் பணம் இல்லாத மக்களை சுரண்டவே வந்துள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்வாறான இணையத்தில் கடன் வழங்கும் திட்டங்களில் கடன் பெற்ற எவரும் கடனை செலுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.