இன்று இந்துக்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்பது தமிழர்கள் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஆகும். வயல்களில் நல்ல விளைச்சல் கிடைக்க உதவி செய்த சூரியன், இயற்கை அன்னை, பண்ணை விலங்குகள் அனைத்துக்கும் நன்றி சொல்லும் கொண்டாட்டமாகப் பொங்கல் அமைகிறது.
நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல், தை மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. தை மாதம் மங்களகரமான மாதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15 அன்று தை மாதம் பிறக்கும்.
பொங்கல் பண்டிகையின்போது சமைத்து சாப்பிடும் உணவின் பெயரும் பொங்கல். இது ஓர் இனிப்பு கலந்த சாதம். “பொங்கு” என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து “பொங்கல்” உருவானது.