நாட்டின் பல முக்கிய மாவட்டங்களில் காற்றின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை பாரதூரமான நிலைமை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அந்த அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை போன்ற மக்கள் செறிவான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற 105 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று யாழ்ப்பாணத்தில் 100க்கு அண்மித்த காற்றின் தரச் சுட்டெண் மதிப்புகள் பதிவானது, இது ஆரோக்கியமற்ற காற்று நிலையைக் குறிக்கிறது.