கிழக்கு மாகாணத்தை காய்கறி மற்றும் உணவுத் தன்னிறைவு நிலைக்கு முன்னேற்றுவது குறித்த திட்டங்களை அமுல்படுத்த அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.
காய்கறிகளின் திடீர் விலையேற்றம் குறித்து விவசாயச் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்களத் தலைவர் ஆகியோருடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் வெற்று காணிகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
பிரதம செயலாளர், உள்ளூராட்சி செயலாளர், மாகாண சபை செயலாளர், வீதி செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் கல்வி செயலாளர் ஆகியோர் விவசாய அமைச்சின் தொழில்நுட்ப ஆதரவுடன் ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது நிறுவனங்களின் கீழ் விவசாய முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தை முதலாவது தன்னிறைவு பெற்ற மாகாணமாக மாற்றுவதுடன், உணவுப் பாதுகாப்பிற்கு ஏனைய மாகாணங்களுக்கும் உதவி செய்யும் நிலைக்கு முன்னேற்றுவது தனது நோக்கம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.