அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22.01.2024 அன்று பெலியத்த பிரதேசத்தில் இந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் 39 வயது மனைவி மற்றும் 72 வயதுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பதகம, முத்தரகம, பல்லேவெல பொலிஸ் பிரிவில் மறைந்து இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் கடந்த ஜனவரி 21ஆம் திகதி பெலியஅத்த பகுதிக்கு பேருந்தில் புறப்பட்டு 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் ஒருவருடன் துபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.
துபாயில் உள்ள நிபுண மூலம் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரும் தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹர்ஷ என்ற ஹரேந்திர குணதிலக்கவின் வழிகாட்டலில் இது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.