நாம் ஒரு நாட்டிற்குச் சென்று ஒரு நாட்டின் அரச தலைவர்களைச் சந்திப்பது எமது அரசியல் அல்லது பொருளாதாரக் கொள்கையை மாற்றுவதற்குக் காரணமல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவுக்கு வரும் முதல் அரசியல் குழு நாங்கள் அல்ல.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்துள்ளதோடு, எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும் உலக நாடுகளும், இந்தியத் தலைவர்களும் அறிவர் எனவும், தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை பொருட்படுத்தாது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது நாட்டின் முக்கிய அரசியல் திருப்புமுனையாக மாறும்.
இந்திய அரசாங்கத்துடனான உடன்படிக்கையில், அரசாங்கங்களுக்கிடையில் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும், நாங்கள் ஒரு அரசியல் இயக்கம் என்பதால், நாங்கள் புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டுள்ளோம் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுரகுமார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்று (10) பிற்பகல் 03.10 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானமான யுகே-131 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.