web log free
April 22, 2025

இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை கடற்படைக்கும் எதிராக ஆர்ப்பாட்டம்

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.

534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது.

எனவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து  11 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று (11.02.2024) காலை 10.30 மணியளவில் இருந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை கடற்படையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகள், மீனவர்கள் என ஆயிரக்கணக்கானோர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd