நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் நடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் நபர்கள் குறித்து விசாரணை செய்யுமாறு மாளிகாகந்த பிரதான நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
போதைப்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் “மாவா” என்ற போதைப்பொருளே பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் முதல் படியாக இருப்பதால் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசாரணைகளை நடத்துமாறும் நீதவான் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, அபின் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் "மாவா" என்ற போதைப்பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் அதிகளவு அடிமையாகி அதனை மிகக்குறைந்த விலைக்கு மாணவர்களுக்கு வழங்கி, பின்னர் போதைப்பொருளை உட்கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.