web log free
November 24, 2024

இவ்வருடம் பொதுத் தேர்தல் நடப்பது சந்தேகநகம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் சுமார் 9,750,000,000 ரூபா என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2023 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் 2024 பட்ஜெட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்டது.

“பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் இதேபோன்ற வரவு செலவுத் திட்டம் தேவைப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

 

எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதிப்படுத்தினார். "ஆனால் இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd