web log free
May 03, 2024

தேங்காய் எண்ணெய் குறித்து வெளியான செய்தி

இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 24,0000 மெற்றிக் தொன் எனவும், அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளுர் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் மினுவாங்கொடை பிரதேச நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்து சமநிலையை பராமரிக்காவிட்டால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2800-3200 மில்லியன் தேங்காய்களாகவும், உள்நாட்டு நுகர்வுக்கு எடுத்துக் கொண்டால் 70% ஆகவும் உள்ளது.

மேலும், ஒரு தேங்காய் 70 ரூபாவுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து கொள்வனவு செய்து எண்ணெயாக மாற்றினால், ஒரு போத்தல் எண்ணெய் 600 ரூபாவாகும் எனவும், தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் 400 – 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.