ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என சில கட்சிகள் போலியான கருத்துக்கணிப்புகளை முன்வைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்களில் எப்போதுமே அந்தக் கட்சியே வெற்றி பெறும் என்றும், ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் காளான்கள் போல் கணக்கெடுப்பு அறிக்கைகள் வெளிவருவதாகவும், அந்த தரவுகள் பொய்யானவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வு அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள அறிக்கை தரவுகளிலிருந்து மாதிரிகள் மற்றும் தகவல்களை எவ்வாறு எடுப்பது என்பது தெளிவாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.