web log free
April 22, 2025

இரகசிய கூட்டம் நடாத்திய சந்தேகத்தில் கைதான 30 பேர் பிணையில் விடுதலை

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (1) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் காசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் பொலிசார் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டார் சைக்கிள்கள் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிசார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை வெள்ளிக்கிழமை (1) மாலையில் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd