web log free
September 18, 2025

கோபா குழு தலைவராக லசந்த தெரிவு

பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இன்று (07) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார். 

இதன்போது, லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வழிமொழிந்தார். 

இதன்போது குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் புதிய தலைவர் வருகை தந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பிரசன்ன ரணவீர, டயனா கமகே,  சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க,  வஜிர அபேவர்தன,  ஏ.எல்.எம். அதாஉல்லா,  நிரோஷன் பெரேரா,  அஷோக் அபேசிங்க, ஜயந்த கெடகொட,  எஸ். சிறீதரன்,  ஹெக்டர் அப்புஹாமி, எம். உதயகுமார்,  மேஜர் பிரதீப் உந்துகொட, கருணாதாச கொடிதுவாக்கு,  இசுறு தொடங்கொட,  முதிதா பிரசாந்தி,  சஹன் பிரதீப் விதான, மதுர விதானகே,  வீரசுமன வீரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd