web log free
July 30, 2025

17 வயது யுவதி கழுத்தறுத்து கொலை

எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் யுவதி சடலம் இன்று (9) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கரந்தெனிய மண்டகந்த தல்கஹவத்தையை சேர்ந்த ஆராச்சி கங்கணம் ஹன்சிகா நதீஷா என்ற பதினேழு வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த யுவதியை உறவினர் ஒருவர் முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவர்களின் வேலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd