web log free
April 30, 2024

ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.பி தெரிவித்தார். ந்

கடந்த முறையும் இம்முறையும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்த போது எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.