web log free
May 02, 2024

இன்னும் இரண்டு மாதங்கள் இதே வெப்ப காலநிலை

மே மாத நடுப்பகுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வரை வெப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் நிபுணர் பபோதினி கருணாபால தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் வளிமண்டலத்தின் பல பகுதிகளில் நீராவி அதிகரித்துள்ளமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை நிலவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதிக தண்ணீர் குடிக்கவும், சூரிய ஒளி படாமல் இருக்கவும், குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளுக்கு அனுப்ப வேண்டாம், முதியோர்களை உன்னிப்பாக கவனிக்கவும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.