web log free
September 18, 2025

கொழும்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கிளை!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது.

இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என அந்த நாட்டின் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு அறக்கட்டளை இலங்கையின் தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு அந்நாட்டு அரசு மூலம் இந்திய அரசை அனுகியது.

இதுகுறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கடந்த 2ஆம் திகதி இலங்கை சென்று கோவில் கட்டுவதற்கான இடங்கள் மற்றும் எவ்வளவு மதிப்பீட்டில் கோவில் கட்டுவது குறித்து ஆய்வு செய்ய இருந்தார்.

சில நிர்வாக காரணங்களுக்காக தர்மா ரெட்டி இலங்கை செல்வது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் 29ஆம் திகதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி இலங்கை செல்கிறார். அவர் கோவில் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்யவுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd