web log free
April 22, 2025

மைத்திரி வாக்குமூலம் அளித்த போது அவரது நெருங்கிய சகா செய்த காரியம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகார செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கும், இந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி வாங்க்கும் இடையில் விசேட இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு 7இல் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் இந்த இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், மதிய உணவு உண்ணும் போது சில விடயங்களை கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் முதலில் புறப்பட்டு சென்றார்.

10 நிமிடங்களின் பின்னர் சஜின் வாஸ் குணவர்தன அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd