web log free
May 11, 2026

இஸ்லாத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு நான்கு வருட சிறை

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாமியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd