ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய கூட்டணியின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியாக ஆதரவளிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆசியும் கிடைக்கப்பெறுவதாகவும் அறியமுடிகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த அநீதியான செயலுக்கு மிக விரைவில் பதில் அளிப்பதாகவும், கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் கொள்கையில்லாமல் தீர்மானம் எடுத்ததன் காரணமாகவே இன்று கட்சி வெற்றிப் பாதையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் எம்பிக்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.