web log free
May 08, 2024

கச்சத்தீவு விவகாரம்: விடாபிடியான நிலைப்பாட்டில் இலங்கை!

கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குச் சென்ற விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைக் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரிக்கு அருகாமையிலுள்ள வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா தனது நலன்களை கருத்திற் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் மீனவர்களுக்கும், கடல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வளங்களை கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை எதிர்காலத்தில் இலங்கை உரிமை கோரக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா கையகப்படுத்தி இருக்கலாம் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க இடமளிக்க முடியாது என இலங்கை மீனவர்களும் கூறுகச்சத்தீவு பகுதியை காங்கிரஸ் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

"கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரஸை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது," என பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், கச்சத்தீவு விவகாரம் பாரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இலங்கையிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பதிலளித்தார்.

அப்போது அவர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றது என்றும், இவை தேர்தல் காலகட்டங்களில் மேலெழுகின்றன என்றும் கூறினார்.

“1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் செய்த ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் இலங்கைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடலுக்குள்ளும் போய் தொழில் செய்யலாம் என்று இருந்தது. பின் 1976-ஆம் ஆண்டு அது தடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதும், இலங்கை மீனவர்கள் இந்தியாவிற்குள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது,” என்றார்.

மேலும், “அதேபோல இந்த வாட்ஜ் பேங்க் என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுமரிக்கு கீழ் அதிக வளங்களை கொண்ட பெரிய பிரதேசமாக இருக்கின்ற ஒரு பகுதி. அதாவது கச்சத்தீவை போல 80 மடங்குக்கு மேற்பட்ட ஒரு பிரதேசம். அந்த பிரதேசம் 1976-ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டு, அவர்கள் அதனை உள்வாங்கிக் கொண்டார்கள்,” என்றார்.

அதிக வளங்கள் உள்ள பகுதி வாட்ஜ் பேங்க் என்றபடியால், இலங்கை மீனவர்கள் அங்கு தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை அப்பகுதிக்கு உரிமை கோரிவிடக்கூடாது என்ற ஒரு உள்நோக்கத்துடன் தான் அது செய்யப்பட்டதாக தான் கருதுவதாக அவர் கூறினார்.

மேலும் “கச்சத்தீவை திருப்பி கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை," என டக்ளஸ் தேவானந்தாஇந்நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''கச்சத்தீவு என்பது எங்களுடைய தீவு என்பதே முடிவு. அது சம்பந்தமாக இந்தியாவில் கதைக்கின்றார்கள் என்றால், முழுமையாக அரசியல் நோக்கமாக தான் கதைக்கின்றார்கள். அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இது பற்றிய கதை வருகின்றது,” என்றார் நற்குணம்.

“இந்திரா காந்தி அம்மையார் இருந்த நேரம் 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அதனூடாக [கச்சத்தீவு] இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்திற்கு மாநில தரப்பு பெற்றுத்தருவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று,” என்றார்.

மேலும், “இந்திய வெளிவிவகார அமைச்சர்கூட சொல்லியிருக்கின்றார், இந்திய டோலர் படகுகள் எல்லை தாண்டிப் போவது குற்றம். கச்சத்தீவு பகுதிக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றம்,” என்றார்.

மேலும், வாக்கு அரசியலுக்காகவே இது இந்தியாவில் பேசுபொருளாகியிருக்கிறது என்று அவர் கூறுவாட்ஜ் பேங்க் பகுதி குறித்தும் நற்குணம் தனது கருத்தை வெளியிட்டார்.

''அந்த பிரதேசங்களில் நல்ல மீன் வளம் இருக்கின்றது. வாட்ஜ் பேங்க் என்ற பகுதிக்குள் நாங்களும் தொழில் செய்யக்கூடிய வகையிலான சட்ட அமைவு தான் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் அந்த பாரிய கடல் பிரதேசத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு, கச்சத்தீவு பகுதியை வழங்கினார்கள்,” என்றார் அவர்.

“கச்சத்தீவு சட்டப்படி எங்களுடையது. கச்சத்தீவை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களிடமும் சர்வதேச கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையிலான படகுகள் இருக்கின்றது. அதைக் கொண்டு வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் சென்று நாங்களும் மீன்பிடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு கட்டத்திற்கு மாற வேண்டிய நிலைமையும் எங்களுக்கு ஏற்படும். அப்படியொரு தேவைப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது. கச்சத்தீவை வலியுறுத்தினால், நாங்களும் வாட்ஜ் பேங்க் பகுதியை வலியுறுத்தும் நிலை வரும்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.கின்றார். கூறினார்.கியுள்ளது.கின்றனர்.