web log free
February 03, 2026

200 கிலோ ஹெரோயின் மீட்பு

ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் 200 கிலோ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கையின் பல நாள் மீன்பிடி படகுகள் ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தென் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில், போதைப்பொருளை ஏற்றிச் சென்ற 02 பல நாள் மீன்பிடி படகுகளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களும் அவர்களது போதைப் பொருட்களும் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd