முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடிக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சில வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வாடகைத் தொகை 2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும், இவற்றில் இரண்டு வாகனங்கள் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு பத்திரிகை ஒன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பான முறைப்பாடு ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க, இந்த வாகனங்களை 2006 ஆம் ஆண்டு முதல் மூன்று ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் செலுத்தாத காரணத்தால் செலுத்தப்படாத தொகைக்கு 3%, 4% மாதாந்திர வட்டி வசூலிக்க சம்பந்தப்பட்ட வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ணணணமுன்னாள் ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.