web log free
November 24, 2024

மட்டக்களப்பு சுமண தேரரின் பாதுகாப்பு நீக்கம்

முப்பது வருடங்களுக்கும் மேலாக உயிருக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையில் தமது உயிரைப் பாதுகாத்து வந்த 5 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அப்புறப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து உயிருக்கு மேலும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக மட்டக்களப்பு மங்கலாராமய அம்பிட்டியே சுமண தேரர் தெரிவித்துள்ளார். 

பெப்ரவரி 23, 2023 அன்று, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருந்து தப்பினேன். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது,  பாதுகாத்த அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களையும் அகற்றிய பின்னர் எனது உயிருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், பின்னர் அனைத்து உயர் அதிகாரிகளும் அந்த நபர்களை நீக்கிய பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டும் என சுமண தேரர் தெரிவித்துள்ளார்.

முப்பது வருட கொடூர யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ.ஈ. கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளுடன் மோதுண்டு சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்றிய தம்மைப் பாதுகாத்து வந்த சிவில் பாதுகாப்புப் படையினர் திடீரென அகற்றியமை தனது வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்பிட்டிய சுமண தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் காணிப்பிரச்சினைக்கு தாம் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களாலும், அரசியல் சதிகாரர்களாலும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், பொலிஸில் எத்தனை முறைப்பாடுகள் செய்தாலும் பொருட்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேளையில் தம்மைப் பாதுகாத்து வந்த உத்தியோகத்தர்களை நீக்குவது வேதனையான விடயம் எனவும், இது தொடர்பில் கவனம் செலுத்தி மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அம்பிட்டிய சுமண தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd