இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நளினி என்ற பெண் வாக்களித்துள்ளார்.
இவர் திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்.
கடந்த 1986ஆம் ஆண்டு இராமேஸ்வரத்திலுள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தார் நளினி.
அவர் பிறந்த ஆண்டை கணக்கில் கொண்டு இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியராக கருதப்படுகிறார். இந்த அடிப்படையில் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் வாக்களித்துள்ளார்.