web log free
June 27, 2026

வேலுகுமார் எம்பி மீது தாக்குதல் முயற்சி

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது.

அந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரும் கலந்துகொண்டிருந்தார்.

அந்நிகழ்வின் பின் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த வேலு குமார் எம்பியை இ.தொ.க வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட அவரது அடியாட்கள் குழுவொன்று தாக்க முயற்சித்தது.  

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான இ.தொ.க வின் செயற்பாட்டை தொடர்ச்சியாக வேலு குமார் எம்பி விமர்சித்து வந்தார்.

உண்மையை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமலே இவ்வாறான அநாகரீக செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் என மக்கள் கடும் எதிர்ப்பை இதொகா ஆதரவாளர்களுக்கு தெரிவித்தனர்.

எம்பியை தாக்க முயற்சித்த செல்லமுத்துவின் அடியாட்கள் மக்களின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கி சென்றதாக வேலு குமார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd