ஜனாதிபதியின் ஊடாக 69 மில்லியன் ரூபா எம்.பி ஒதுக்கீடாக கிடைத்ததாகவும், அதற்குரிய நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தான் மட்டுமன்றி மற்றும் பல எம்பிக்கள் குழுவும் இவ்வாறு பணம் பெற்றுள்ளதாகவும், தான் உள்ளிட்ட சிலரின் பெயர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி அரசியல் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு தமக்கு எந்த தடையும் இல்லை எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புனித வெள்ளியன்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், ஏனைய விடயங்கள் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலிகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.