web log free
May 29, 2026

அதிருப்தி அடைந்த எம்பிக்கள் குறித்து ஆராய்வு

சமகி ஜன பலவேகவில் ஏமாற்றம் அடைந்துள்ள எம்.பி.க்கள் பற்றி கண்டறிந்து, அடுத்த சில நாட்களில் அவர்களை மீண்டும் கட்சிக்கு ஒன்று சேர்க்கும் ரகசிய வேலைத்திட்டம் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி, அவர்களின் பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சியின் முக்கியஸ்தர்கள் வேலைத்திட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் மே தினக் கூட்டங்களில் அரசியலில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த இரகசிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியில் சஜபா எம்.பி.க்கள் குழுவொன்றும் இணைந்துகொள்ள வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd