பொதுஜன பெரமுனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்தால், தற்போது ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ராஜபக்சவுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் சுயாதீனமாக மாறத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் நாடாளுமன்றத்தில் சுமார் 60 எம்பிக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விடயம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தின் அமைச்சு அறையொன்றில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் அறியமுடிகின்றது.
மே மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு இதனை அறிவிக்க இந்தக் குழு தீர்மானித்துள்ளது.